மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இன்று மாலை 5.00மணியளவில் மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

மயிலாட்டம்,மான் ஆட்டம் உட்பட தமிழர் கலாசாரங்களை தாங்கியதான நாட்டியங்கள் ஆடிவர கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது.

நாளை பிற்பகல் 12.00மணிக்கு கொடியேற்றம் நிகழவுள்ளதுடன் 10 தினங்கள் வருடாந்த உற்சவத்தினை சிறப்பாக செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.