கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் பாடசாலை மட்டத்தில் நடாத்திய கராத்தே சுற்றுப் போட்டி மட்டக்களப்பு மைக்கல் தேசிய பாடசாலையின் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்ட பாடசாலைகளில் இருந்து பங்குகொண்ட 14,15,19 பிரிவு மாணவர்களுக்கான போட்டியாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு கல்வி திணைக்களத்தின் அனுசரனையுடன் போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டு தினங்கள் இடம்பெற்ற போட்டியில் முதலாவது இடத்தினை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தினை முறக்கொட்டாஞ்சேனை இராம கிருஸ்ண மிஸன் மற்றும் ஆனைப்பந்து இராம கிருஸ்ணமிஸன் ஆகிய பாடசாலைகள் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இதன் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமார்,திருகோணமலை வலய பிரதி உடற்கல்வி பணிப்பாளர் ஜாகூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.