செங்கலடி பிரதேசத்துக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விவசாயதுறை அமைச்சர் யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கரடியனாறில் கமநலசேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தினை அமைப்பதற்கு அமைச்சு 70 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.
இதன் கீழ் நிர்மாணப்பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கமநலா சேவைகள் அபிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிர்மானப்பணியை ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச விவசாய அமைப்புகள்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கமநலசேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
படுவான்கரை பிரதேசத்தின் விவசாய நடவடிக்கையில் கேந்திர நிலையமாகவிளங்கும் கரடியனாறில் இந்த கமநலசேவைகள் அபிவிருத்தி திணைக்கள அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம் இப்பிரதேச மக்கள் நன்மையடையவுள்ளனர்.