எனது அமைச்சு நாடு பூராவும் சேவையாற்ற வேண்டிய அமைச்சாகும் எனினும் அரசியல் சூழ் நிலை காரணமாக ஒரு குறி;ப்பிட்ட பகுதிக்கு மத்திரம் சேவையாற்ற வேண்டியுள்ளது எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் எனது அமைச்சு செயற்திட்டங்களை மேற் கொள்ளும் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பனி மாதிரிக்கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்தவர்களுக்கான சாண்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுமதி சீவரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனது அமைச்சினால் நாடு முழுவதற்கும் கடமையாற்ற வேண்டியுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் கொள்கையே எனது கொள்கையாகும் அந்த வகையில் நான் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன்.
பனைவளத்தை பயன் படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் அதற்காக எனது அமைச்சினால் உதவிகளை வழங்கி வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் முயற்சியையும் மேம்படுத்த எனது அமைச்சினால் தேவையான உதவிகளை வழங்க ஆயத்தமாக உள்ளோம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இதன் போது மட்டக்களப்பு தாழங்குடா பனங்கைப்பனி மாதிரிக்கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்த 195 பேருக்கு சாண்றிதழ்கள் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக முர்த்தி முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி பனை அபிவிருத்தி சபையின் திட்ட முகாமையாளர் எம்.பி.லோகநாதன், அமைச்சின் தேசிய இணைப்பாளரும் முன்னாள் பாளுமன்ற உறுப்பினருமான செல்வி கே.தங்கேஸ்வரி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் உட்பட அமைச்சின் அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.