கூழாவடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி-இருவர் கைது (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மாமாங்கத்தினை சேர்ந்த 63வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் சைக்கிளில் வீதியை கடக்கமுனைந்தபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மோட்டார் சைக்கிளை ஓட்டுச்சென்றவரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.