கொக்கட்டிச்சோலையில் குழந்தையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பட்டிப்பளை- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் 6 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் சடலம் மலசல கூடும் ஒன்றில் இருந்து இன்றைய தினம் காலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை தான்தோற்றீஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள இடத்துக்குப் பின்னாலுள்ள மலசல கூடம் ஒன்றிலிருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அல்லது அதற்கு முதல் தினம் இக்குழந்தை வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இக்குழந்தையாருடையது, இவ்வாறு வீசியது யார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.