துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகத்தின் 42 ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு மின்னொளியிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு புதன்கிழமை இரவு கழகத்தலைவர் அ.சதீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இப்போட்டி கடந்த13 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெற்று இறுதிப்போட்டி புதன்கிழமை இரவு இடம்பெற்றது. இதில் 50 இற்கு மேற்பட்ட கழகங்கள் கலந்து கொண்டன.
இதில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக ;கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேந்திரன் மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான துரைராசசிங்கம், மா.நடராசா, த.கலையரசன், கோ.கருணாகரம்(ஜனா), தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத் தலைவர் அதிபர் .மு.இராஜகோபால் மாரியம்மன் ஆலயத் தலைவர் க.யோகராசா , உச்சிமா காளியம்மன் ஆலயத்தலைவர் க.நாகலிங்கம் பொதுச்சுகாதார பரிசோதகர் பி.இளங்கோ, தாதிஉத்தியோகத்தர் க. அழகரெட்ணம், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் ஆ.திருச்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டதுடன் கடந்த வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.









