மொழித்துறைத் தலைவி கலாநிதி நதிரா மரியசந்தானம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உபவேந்தர் கலாநிதி கிட்னண் கோபிந்தராஜா கண்காட்சியைத்திறந்து வைத்தார்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக கலை கலாசார பீட பீடாதிபதி, பேராசிரியர் மா.செல்வராஜா கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் .கே.மகேசன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக பேராசிரியை மௌ.சித்திரலேகா, மண்முனை மேற்கு பிரதேச செயலாளரும், படி சஞ்சிகையின் ஆசிரியருமான வெ.தவராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர்களான சி.மௌனகுரு, எஸ்.யோகராஜா, சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், மற்றும எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.
இச் சஞ்சியைக் கண்காட்சி இன்றைய தினமும் பல்கலைக்கழக நுண்கலைத்துறை கலைக்கூடத்தில் இடம் பெறுகிறது.