கொழும்பில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சிக்னல் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த ரயில் பாதைகள் ஊடாக இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதத்துடன் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பின் பல்வேறு வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
