முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

அரச உத்தியோகத்தர்களின் நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்குடன் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம்- லோ.தீபாகரன்


அரச உத்தியோகத்தர்களின் நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் உரிமையை வென்று எடுக்கும் ஒரு நோக்கத்தைக் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை நாடெங்கிலும் உள்ள அலுவலகங்களுக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் இணைத்தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாளை திங்கட்கிழமை, அனைத்து அரச அலுவலகங்கள் முன்பாகவும் மதிய நேர இடைவேளையின் போது பொதுமக்களின் சேவைகளுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காத வண்ணம், அதே நேரத்தில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதேபோன்று ஏனைய அரச திணைக்களங்களின் கடமை புரிவோர், உத்தியோகத்தர்களின் நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் உரிமையை வென்று எடுக்கும் ஒரு நோக்கத்தைக் கொண்டு மதிய நேரத்தில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஒவ்வொருவரும் தங்களது திணைக்களங்களுக்கு முன்பாக ஒரு 15 நிமிடங்கள் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களைப் போன்று 16க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டன. அதில் உதாரணமாகக் குறிப்பாகச் சொல்லலாம்: முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், அதேபோன்று முமுளு என்று சொல்லப்படுகின்ற அந்த ஊழியர் வகைக்குள் உள்ளடங்குபவர்கள், அரசுத் துறையில் கல்வி சாரா ஊழியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு துறையினரும் இங்கு இந்தப் போராட்டத்தில் இணைந்து எதிர்வரும் 23 ஆம் திகதி போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.

அந்த வகையில் எமது போராட்டமானது 23 ஆம் திகதி இடம்பெற்ற பின்னர் அரசால் அது தொடர்பாகக் கவனத்தில் கொள்ளப்படாத விடத்து, எதிர்வரும் 30 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டமாக நாடு பூராகவும் இது பாரிய அளவில் இடம்பெற உள்ளது.

இந்தப் போராட்டமானது கடந்த நாட்களில் எமது பாராளுமன்றத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட அந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் நாங்கள், எங்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டதாக அதாவது சம்பள முரண்பாடுகள், எமது அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும் நாம் அரச உத்தியோகத்தர்கள் நீண்ட நாட்களாகக் கூறி வந்திருந்தோம்.

எமது சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள், அதன் ஊடாக எமது அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். MN4 என்ற அடிப்படைச் சம்பளத்திலிருந்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஏற்ப எம்என்5 என்ற சம்பள அளவுத் திட்டம், அதேபோன்று விசேட ஒரு பதவி உயர்வு ஊடாக எம்என 7 என்ற வகைக்குள் ஒரு பதவி உயர்வு, அதேபோன்று ஏனைய சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த காலங்களில் திட்டங்களை வகுத்துத் திட்ட முன்மொழிகளை நாம் அமைச்சின் செயலாளர்கள்இ ஜனாதிபதியின் செயலாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற அனைவருக்கும் இது தொடர்பாக வழங்கியிருந்தோம். ஆனால் இதுவரைக்கும் அதற்கு எமக்குச் சாதகமான எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்த பட்ஜெட்டில் கூட எங்களுக்கு அதற்கான ஒரு நீதி கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

அதேபோன்று, எம்மைப் போன்ற ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதுவும் குறிப்பாகக் கீழ்நிலையில் உள்ள இந்த உத்தியோகத்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிகரித்த வாழ்க்கைச் செலவு, அதிகரித்த செலவீனங்கள் போன்ற விடயங்களில் எமது இந்த அடிப்படைச் சம்பளம் என்பது போதுமானதாக இல்லை. அந்த வகையில் நாம் கேட்பது சலுகைகள் அல்ல் எமது ஜீவனோபாயம், வாழ்க்கையை ஒரு சாதாரணமான மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைதான். அந்த வகையில்தான் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு கூறுகின்றோம். அதன் அடிப்படையில் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதோடு ஆரம்பக்கட்டமாக இடைக்காலக் கொடுப்பனவாக 20,000 ரூபாய் தொடக்கம் 25,000 ரூபாய் வரையான ஒரு சம்பள அதிகரிப்பு அல்லது சம்பள இடைக்காலக் கொடுப்பனவாக வழங்குமாறு நாம் கூறுகின்றோம். நாம் எமக்காக மாத்திரமல்ல, அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு இதில் இந்தக் கோரிக்கையை அவர்கள் சார்பாகவும் முன்வைக்கின்றோம்.

அதே போன்றுதான் இந்த பட்ஜெட்டில் வந்து பிரயாணக் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசு ஊழியர்களுக்கு இடையில் சில முரண்பாடுகளைத் தோற்றுவிப்பது போன்ற எண்ணப்பாடுகளை ஏற்படுத்தும் வண்ணம் அதிகரிப்புகள் இடம்பெறுகின்றன. அந்த அதிகரிப்பையும் தீர்த்து எமக்கு முறையான ஒரு நீதியையும் பெற்றுத் தருமாறுதான் நாம் இந்த இடத்தில் இங்கு கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் தான் நாடு பூராகவும் ஏனைய தொழிற்சங்கங்களும் தங்களது கோரிக்கைகள், தங்களது நியாயமான கருத்துக்களை முன்வைத்து ஒரு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் 23 ஆம் தேதி இந்த அரசுத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் இணைந்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றாக இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றன.

அதற்கு எமது ஊழியர்கள் அனைவரும் உங்களது பூரண ஆதரவைத் தர வேண்டும் எனக் கோருவதோடு, சிலர் அரசுக்கு எதிரான போராட்டமா அல்லது இது தனிநபர் மேலதிகாரிகளுக்கு எதிரான போராட்டமா என்ற கேள்விகளையும் சிலர் ஐய வினாவாக எழுப்புகின்றன. அவ்வாறு அல்ல் இது எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் கவன ஈர்ப்பாக எமது ஒரு செய்தியை அரசுக்குச் சொல்வதற்காகவும், நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதைக் காட்டுவதற்காகவும், எமது பலத்தை அரசுக்குக் காட்டுவதற்காகவும், அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும்தான் இந்தப் போராட்டத்தை நியாயமான முறையில் செய்து கொண்டிருக்கின்றோம்.