வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மட்டு நியூஸ்


இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) தீபாவளி திருநாள் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

வீடுகளிலும் நிறுவனங்களிலும் தீபங்களை ஏற்றி, தீப ஒளி போன்று வாழ்க்கை பிரகாசிக்கவேண்டும் என்று இறைவனை வணங்கி தீபத் திருநாள் பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர்.

கிருஷ்ண பகவான், நரகாசுரன் எனும் அசுரனை வதம் செய்தமையை நினைவுகூர்ந்து, அதர்மத்தை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதைப் போன்று அனைவரதும் மனங்களிலுள்ள இருள் அகன்று ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்துக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மட்டு நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி சௌபாக்கியம் நிறைந்த  மனப்பூர்வமான இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.