முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

வாழைச்சேனையில் தீக்காயங்களுடன் நபர் சடலமாக மீட்பு – குடும்பத் தகராறால் நேர்ந்த சோக சம்பவம்!


மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பகுதியில் தீக்காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (14) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த நபர் தன்மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.