விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்ற கமு/திகோ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் (விசேட கல்விப் பிரிவு) மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11) புதன்கிழமை பாடசாலையின் காலை ஒன்றுகூடல் நிகழ்வின்போது நடைபெற்றது.
கடந்த 05.11.2026 வியாழக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் கல்வி வலயத்திலிருந்து கமு/திகோ அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் (விசேட கல்விப் பிரிவு) மற்றும் கமு/திகோ பொத்துவில் மெதடிஷ்த தமிழ் மகா வித்தியாலயம் (விசேட கல்விப் பிரிவு) ஆகிய பாடசாலைகள் பங்கேற்றிருந்தன.
வித்தியாலய அதிபர் திரு. த. இராசநாதன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இம்மாகாண மட்டப் போட்டியில், அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் 9 போட்டிகளில் பங்குபற்றி 8 இடங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி, க. பிமிலன் 100 மீற்றர் ஓட்டம், குண்டெறிதல் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். ஜீ. சங்கீத் 200 மீற்றர் ஓட்டம் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் முதலாம் இடத்தையும், 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். க. வேருக்சன் நின்று நீளம் பாய்தலில் முதலாம் இடத்தையும், சமநிலை நடைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.


.jpeg)

.jpeg)

.jpeg)