முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

கல்முனை கலாசார மத்திய நிலையம் அகில இலங்கை சங்கீத நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்.


புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான தேசிய “பிரதீபா” அகில இலங்கை சங்கீத நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தை கல்முனை கலாசார மத்திய நிலையத்தை சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தவர்கள், தேசிய ரீதியிலும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தை தமதாக்கிக் கொண்டனர்.

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திருமதி ஜெனீத்ரா தேவச்சந்திர அவர்களது ஏற்பாட்டில் வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன் அவர்களது நெறியாள்கை மற்றும் வழிப்படுத்தலுடன் நாட்டிய நாடகம் "கண்ணகி வழக்குரை" அ.கல்யாண்சரன், திருமதி.கோஷல்லியா பிரமீன், என்.குகன் ஆகியோரது வாய்ப்பாட்டு பக்க வாத்தியங்களுடன் ரஞ்சிதன் மதுரா, சிவானந்தன் மியோளினா, ராஜகுமார் டதுஸ்னி, மகேந்திரன் கிவோக்சிகா, ஜீவராசா நாகசதா, கேந்திரன் திலுக்ஷியா, கருணாநிதி யர்ஷிகா, கிருஷ்ணமூர்த்தி லோஜி ஆகிய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.