கமு / திகோ / கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.


06.10.2026 நேற்று கமு / திகோ / கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. பாடசாலையின் அதிபர் பே. திலகராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், அன்பு மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர்கள் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இவ்வாசிரியர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களின் அறிவு, திறமை மற்றும் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்றைய ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் ஆசிரியர்கள் வழங்கிவரும் சேவையை மதித்து, அவர்களுக்கு நன்றி மற்றும் கௌரவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் ஆசிரியர்களை கௌரவிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான அன்பு, நல்லுறவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் நிகழ்வுகள் அமைந்திருந்தன.

 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் இந்நிகழ்வு, பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான சிறந்த ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியது.

ஆசிரியர்களின் சேவையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கும் ஒரு அர்த்தமிக்க நாளாகவும், பாடசாலை சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாகவும் அமைந்தது.

அனைத்து நிகழ்வுகளும் பிற்பகல் 1மணிக்கு பின்னர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.