மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த சிறுநீரக நோயாளிகளுக்கான சிறுநீரக பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய சிறுநீரக சிகிச்சை பிரிவைத் திறந்து வைத்தார்.
சுகாதார அமைச்சின் சுமார் 250மில்லியன் ரூபா செலவில் இந்த நிலையம் சகல வசதிகளுடனும் கூடியதாக அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைச் சேர்ந்த சிறுநீரக நோயாளிகளுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் இப் புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இப் பிரிவின் திறப்பு மூலம் அப்பகுதி பொதுமக்கள் தங்களது சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவாகவும் இலகுவாகவும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை தொடர்ந்து வைத்தியசாலையில் புதிய சிகிச்சை பிரிவின் செயல்பாடுகள் மற்றும் நோயாளர்களுக்கான வசதிகள் தொடர்பிலும் வைத்தியசாலையின் ஏனைய செயற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.



.jpeg)


.jpeg)



.jpeg)



.jpeg)