வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று பகுதியிலுள்ள வயல் பகுதியில் புதன்கிழமை (21) 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுகயீனமற்ற நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, பாதிக்கப்பட்ட யானைக்குத் தங்கு தடையின்றி அவசரச் சிகிச்சைகளை அளிப்பதற்குத் தேவையான கூடார வசதிகள் மற்றும் யானையை மீட்கும் பணிகளுக்கான கனரக வாகன வசதிகள் சம்மாந்துறை பிரதேச சபையினால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வயல்வெளியின் சேற்றுப் பகுதியில் எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கும் இவ் யானையின் உயிரைப் பாதுகாத்து, அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வனவிலங்கு மருத்துவக் குழுவினர் வியாழக்கிழமை (22) முதல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





