புதிய தொழில் நுட்பத்துடன் முதியோர்கள்"விழிப்புணர்வு நிகழ்வு


சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக, “புதிய தொழில்நுட்பத்துடன் முதியோர்” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் அவர்களின் தலைமையில், சாலியபுர முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (07) முள்ளிப்பொத்தானையில் உள்ள சாலியபுர முதியோர் சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக சேவைகள் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுதொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முதியோர்களும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமது அன்றாட வாழ்க்கையை மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது முதியோர்களுக்கான தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன், அவர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.