கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் கல்வி வலயத்தில் மூவருக்கு கல்வி முதுமாணி பட்டம்


இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி (Master of Education) பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் திரு. இரத்தினசிங்கம் சுதர்ஷன், ஆசிரியர்களான திருமதி சரனியா சுரேஸ்குமார் மற்றும் திருமதி நிலோஜினி தயாகரன் ஆகியோர் கல்வி முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கல்வித்துறையில் தமது பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் நிலையில், உயர்கல்வியைத் தொடர மேற்கொண்ட முயற்சியின் பயனாக இவர்கள் கல்வி முதுமாணி பட்டத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களின் கல்விச் சாதனைக்கு சக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.