வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து மஞ்சள் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல இடங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருங்கள். எக்காரணம் கொண்டும் மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிருங்கள். இடிமின்னல் நேரங்களில் வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளில் நடமாடுவதைத் தவிருங்கள்.
கம்பிகளுடனான தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். வீழ்ந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருங்கள்.
அவசர நிலைகளின் போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுங்கள்.
