வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம்!


அடுத்த சில நாட்களில் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான காலநிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் அவ்வப்போது ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.