ஊவா, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!


ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' (Amber) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை  (19) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும்.

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இடிமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.