காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!


காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என  மஞ்சள் நிற எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, செவ்வாய்க்கிழமை (18) காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கடற்பரப்புகளில் சில சமயங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் கடற்படை மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.