சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு யாழில் சர்வதேச மாநாடு - வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்


எதிர்வரும் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு சர்வதேச மாநாடாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்திலே ஒரு சர்வதேச மாநாடு ஒன்று நடத்துவதற்கு வடக்கு-கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் ஒருஇடம்பெற்றது.

இந்த மாநாடு தொடர்பாகவும், இந்த மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், இந்த மாநாட்டுக்கு ஆதரவை ஆதரவைக் கேட்டுக்கொள்ளும் முகமாகவும் இந்தச் கலந்துரையாடல் அமைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அதேபோன்று சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார் அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை பாதர் டேவிட் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அதேபோன்று ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதில் முக்கியமான சில விடயங்களும் மாநாடு தொடர்பான கருத்துக்களும் அதில் பகிரப்பட்டன.அதேபோன்று மாநாடு தொடர்பிலான ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன் மாநாட்டினை முன்கொண்டுசெல்வதற்கு அனைவரையும் ஒத்துழைப்பும் இதன்போது கோரப்பட்டது.

இந்த சர்வதேச மாநாடு சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் முகமாக, உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்த தாய்மாரால் ஒரு சர்வதேசத்திற்கு எங்களுக்கு நடந்தது ஒரு காணாமல் ஆக்கப்படுதலும் ஒரு இன அழிப்பும், திட்டமிட்ட இன அழிப்பும் என்பதை எடுத்துக்கூறும் முகமாக இந்த மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிலன் அனைத்துச் சமூகமும் இதில் பங்குபற்றி, தாய்மாரினுடைய வலிகளை உணர்த்துற ஒரு மாநாடாக அது அமைய இருக்கின்றது. அதன் அடிப்படையில் இதுவரைக்கும் எங்களோடு தேடி, தேடினதுல இறந்த தாய்மார்கள் 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களுடைய சாட்சியங்களைப் பதிவுசெய்து புத்தகங்களாக வெளியிடுறது அழிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற புத்தகத்தையும், இதுவரை காலமும் நாங்கள் போராட்டங்களில் கையளிக்கப்பட்ட அறிக்கைகளை ஒரு புத்தக வடிவமாக்கி வடிவமாகவும், அதில புத்தகங்களாக நாங்கள் வெளியிட இருக்கிறோம் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

அதேபோன்று பல்வேறு அம்சங்கள் அந்த மாநாட்டிலே இடம்பெற இருக்கின்றது. அதில பேனல் டிஸ்கஷன் சிறப்புரைகள், கண்காட்சிகள், இப்படியான பல்வேறுபட்ட பேரணி, இப்படியான பல்வேறுபட்ட தொடர்ச்சியான அந்த மாநாட்டின் நிகழ்வுகளாக அமைய இருக்கின்றது. அதற்கு சர்வதேச ரீதியாகவும், வடக்கு-கிழக்கு சார்ந்த ரீதியாகவும் அனைவரும், தமிழ் தேசியத்தோடு பயணிக்கிற அனைவரும் எமக்கு நடந்த இந்த அநியாயத்துக்கு, அநீதிக்கு நீதி பெற்றெடுப்பதற்கு அனைவரும் இதில் ஒன்றுதிரண்டு எமக்காகக் குரல்கொடுத்து, எமக்கான நீதியைப் பெற்றெடுப்பதற்கு எல்லாரும் முன்வர வேண்டும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.