தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வெட்டாத்து பால வீதி புனரமைப்பு


திருகோணமலை மாவட்ட,தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வெட்டாத்து பாலம் புனரமைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த தம்பலாகாமம் கோயிலடி வைத்தியசாலை _தாயிப் நகர் வெட்டாத்து பால வீதி  புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாமை குறித்து ஊடகங்களில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி மேற்கொண்ட முயற்சியின் பயனாக  புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியானது ஒவ்வொரு மாரி மழை காலங்களிலும் மிக மோசமாக பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. மக்கள் இவ் வீதியையே வைத்தியசாலை,மாணவர்கள் பாடசாலைக்கு செல்லுதல் என பல முக்கிய தேவைக்குப் பயன்படுத்தும் வீதியாக காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் குறித்த வீதி தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி.விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

இவ் வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது இதனை கருத்தில் கொண்டு தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட அனைவரதும் ஒத்துழைப்பில் இதனை புனர் நிர்மாணம் செய்துள்ளோம் என்றார்.