கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மண்முனையை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த உலகநாச்சியாரினால் வழிபாடுசெய்யப்பட்டுவந்த தாந்தாமலை முருகன் ஆலயமானது இலங்கையின் வரலாற்றுசிறப்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது.
21தினங்கள் நடைபெற்ற உற்சவ காலங்களில் தினமும் வசந்த மண்டப பூஜை சுவாமி வீதியுலா என்பன நடைபெற்றுவந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு கிராம மக்கள் இணைந்து இந்த 21 நாட்களும் திருவிழாக்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இன்று அதிகாலை வேளையில் மூல மூர்த்திக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு, சுண்னம் இடித்ததைத் தொடர்ந்து, நடைபெற்ற வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தீர்த்தக் கேணியை அடைந்தார்.
புனித தீர்த்தோற்சவம், திருவோண நட்சத்திரம் கூடிய சுபமுஹ_ர்த்த வேளையில் தீர்த்தக்கேணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.








