கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள். ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது, இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்திசாமி பிரபு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவிக் காசோலைகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதியின் “நாடே முதன்மை” மற்றும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டங்களின் கீழ் இந்த நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
71 பயனாளிகளுக்கு சுமார் 7.16 மில்லியன் பெறுமதியான காசோலைகள் செவ்வாய்க்கிழமை (28) திகதி மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஞா.சுகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் எஸ்.விநோராஜ், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் பிரிதௌஸ் நளிமி உள்ளிட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, வீடு அமைப்பதற்கென நிதிகளை நாங்கள் பங்களித்துக் கொண்டு வருகின்றோம். அதேவேளை, வீதி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ற விதமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான மேம்பாடுகள், விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கிராமங்களின் ஊடாக வளர்ச்சி செய்யக்கூடிய மக்கள் சக்தித் திட்டங்கள், மீனவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் என அனைத்து விடயங்களுக்கும் தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதிகளை வழங்கி வருகின்றது.
இதன் ஊடாக நமது பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அதுமட்டுமன்றி, சமூக நலத் திட்டங்களின் ஊடாக நமது மக்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற இந்த வேளையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் போதைப்பொருளுக்கு எதிராகவும், பாதாள உலகச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் இந்த அரசு தொடர்ச்சியாக அதனைத் தடுப்பதற்கும், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனை வழங்கும் விடயத்திலும் நேர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
ஒவ்வொரு குற்றச்செயலிலும், பாதாள உலகச் செயல்பாடுகளிலும், இந்த போதைக் கலாச்சாரத்தை இந்த நாட்டில் உருவாக்கியவர்களிலும் மிக முக்கியமான பின்னணியாக இருந்தவர்கள் அந்த அரசியல்வாதிகள். எனவேஇ இந்த விடயங்களில் சட்டம் இப்போது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது அதிகமான நம்பிக்கை இருக்கின்றது. நீங்கள் தந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுவதற்காக நாங்கள் நேர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும் தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் நீங்கள் செயல்பட்டிருந்தீர்கள். அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் எங்களுக்கு ஆணையளித்திருந்தீர்கள். ஆனால், இந்த ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது, இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
ஆகவே, அரசு நிதியை நாங்கள் இப்போது சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்..
இந்த நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தித் தந்திருக்கின்றது. நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க அவர்கள், அனைத்து விடயங்களிலும் மக்கள் சார்ந்ததாகவே எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
(1).jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)