மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வின் விசேட செயற்திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகளை மேம்படுத்தி மக்களுக்கு வினைத்திறன் மிக்க வைத்திய சேவையினை உறுதி செய்தல் எனும் வகையில் நேரடி கள விஜயத்தின் ஊடாக குறைபாடுகள் மற்றும் வள மேம்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்ளும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது .
அதன் ஒரு அங்கமாக மண்டூர் வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் விஜயம் செய்து வைத்திய சாலையின் அத்தியட்சகர் வைத்திய சாலையின் ஏனைய உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான பிரதேச அமைப்பாளர் ஆகியோருடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு குறித்த வைத்தியசாலையின் மேம்பாடு தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்தடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
