கதிர்காமக்கந்தன் ஆலய தீர்த்தோற்சவம்


வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்று (29) இரவு வீதி உலா வந்தது.

லட்சக்கணக்கான அடியார்களின் அரோஹரா கோஷம் விண்ணைத்தொட கதிர்காமக்கந்தன் தீர்த்தமாடினார்

 வரலாற்றுப் பெருமை கொண்ட கதிர்காமம் கந்தன் ஆலய தீர்த்தோற்சவம்( நீர் வெட்டு ) 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் மாணிக்கங்கையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.