செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வழங்க வேண்டுமெனக்கோரி யாழ்.மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரியாலை புனித யுதாதேய சுருபம் முன்பாக காலை 10மணிக்கு ஒன்றுகூடிய மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருமாரும், துறவறத்தினரும் அமைதியாக செம்மணி சிந்துபாத்தி மயானம் வரையில் பேரணியாகச் சென்று நீதிகோரிக்கை விடுத்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், செம்மணிக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் மௌனம் அல்ல நீதியே தேவையை, உண்மைகள் மறைக்கப்படக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.
இதன்போது, செம்மணி மனிதப்புதை குழியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டுமெனக்கோரி அவர்கள் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.



