வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை வெப்பமான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம்

 

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இன்று (10) வெள்ளிக்கிழமை வெப்பமான வானிலை  நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,மட்டக்களப்பு, அம்பாறை,மொனராகலை,அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பக் குறியீடு' ((Heat Index), இன்று பகல் வேளையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' (Caution Level) எட்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக வேலை செய்வதகாலும், வெளியில் நடமாடுவதாலும் அதிக சோர்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

போதியளவு தண்ணீர் அல்லது திரவ உணவுகளை அருந்தி உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருங்கள். 

கடுமையான உடலுழைப்பைக் கோரும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது தவிர்க்கவும். 

இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். 

வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள். வாகனங்களில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம். 

எனவே, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.