மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற 15 வயது சிறுவன் மாயம்.. தேடுதல் பணிகள் தீவிரம்


கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவன் ஒருவர் தண்ணீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.

நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஏனைய மூன்று சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.எனினும், காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும், கம்பளைப் பொலிஸாரும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.