மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ரெலோவின் முக்கிஸ்தரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார்,சிரேஸ்ட விரிவுரையாளர் ரவிச்சந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொதுச்சுடர் மற்றும் ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுச்சுடார் கலந்துகொண்டவர்களினால் ஏற்ற்பபட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் உறுப்பினர்கள்,இயக்கத்தின் உயிர்நீர்த்தவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைரெட்னம்,
போராட்டமாக இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி பலதரப்பட்ட இயக்கங்கள் உருவாகி, அந்தப் போராட்டம் இறுதிப் கட்டத்தில் மௌனிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழர்களுக்கான உரிமைகள் விலை பேசுகின்ற அளவுக்கு மாற்றமடைந்திருக்கின்றன. வடக்கு கிழக்கில் ஒரு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கக்கூடியவாறு, ஆளுமை செலுத்தக்கூடியவாறு நிலைமைகள் மாற்றமடைந்திருக்கின்றன.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் தியாகம் செய்த சமூகம், ஒரு உரிமைகேட்டுப் போராடிய சமூகம், விலைமதிக்க முடியாத உயிர்களைத் தியாகம் செய்த சமூகம், இன்று தேசியக் கட்சிகளின் அலுவலகங்களாக மாறுகின்ற நிலைமையில் சில கட்சிகள் தங்களைச் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வடக்கு கிழக்கில் இன்றுள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரையில் தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியினர் இலங்கையில் பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட, வடக்கு கிழக்கில் இனப்பிரச்சினை தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் எந்த விடயத்தைக் கூட ஒரு அடிகூட, ஒரு அங்குலத்தைக் கூட நகர்த்த முடியாது என்னும் மிகவும் தெளிவான சிந்தனையில் இப்பொழுதிருக்கின்ற ஆளுங்கட்சி தனது செயல்வடிவங்களைக் கொண்டிருக்கின்றது.
தேசிய மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், "தமிழர்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாக்கின்றோம்" என்று கூறிக்கொண்டும், இலங்கை அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13-வது திருத்தத்தில் இருக்கின்ற விடயங்களைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு அந்தக் கட்சிகள் இருக்கின்றன. அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டு, 13-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட பலதரப்பட்ட விடயங்களைக் கூட இந்தப் புதிய தேசியக் கட்சி, புதிய ஆட்சி அமைக்கின்ற ஆளுங்கட்சியினர் அமுல்படுத்த முடியாது என்று கூறுகின்ற நிலையில்... உங்களுக்குத் தெரியும் 30ஆம் தேதி 6ஆம் மாதம் 2006ஆம் ஆண்டு வடக்கு கிழக்கைப் பிரித்த கட்சியும் இதே கட்சிதான்.
இலங்கை அரசாங்கத்திற்கும் ஏனைய நாடுகளுக்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்ட 2006ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் புனர்வாழ்வு ஒன்று அமைப்பதற்கான குழுக்களை நியமித்து, அந்தக் குழுக்களுக்கு ஒரு செயலாளரை நியமிக்கும்போது இதே ஜேவிபி கட்சிதான் வடக்கு கிழக்கில் அந்தக் குழுக்களை அமைப்பதற்கு எதிராகவும் தடையாகவும் இருந்த ஒரு கட்சி. ஆகவே மிகவும் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். "ஊழலை ஒழிக்கின்றோம்" என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்குவந்தவர்கள் இன்றைய சூழ்நிலையில் வரி அறவிடாமல் இந்த நாட்டில் எதையும் செய்ய முடியாது என்ற நிலைமைக்குப் புதிய அரசாங்கம் கொண்டுவந்து விட்டிருக்கின்றது.
"வரி அறவிட்டால் மட்டுமே புதிய அரசாங்கம் இந்த நாட்டைப் பாதுகாக்க முடியும்" என்று பிரச்சாரத்தைச் சொல்லிக்கொண்டும், பலதரப்பட்ட வரிகளை அறவிடக்கூடிய சூழ்நிலைக்கும் நிபந்தனைக்கும் உள்ளாக்கியிருக்கின்றது நாட்டை. ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும், நீங்களாக நேரடியாகச் சம்பந்தப்பட்ட விடயமே விவசாயம். இந்த விவசாயத்தில் கூட, விவசாயம் என்பது உரம் என்பது மானியம். கிட்டத்தட்ட 18,000, 20,000 மானியத்தைப் பெற்று யாரும் பணம் கொடுத்து வாங்கி விவசாயத்தைச் செய்யக்கூடிய அளவுக்குச் சூழ்நிலைகள் இல்லை. இப்பவிருக்கின்ற 240 ரூபாய் அரிசி கிலோ, இந்த 18,000 ரூபாய் 20,000 ரூபாய் உரம் விற்பனை செய்யப்பட்டால் இந்த அரிசியின் விலை 500 ரூபாயாக மாறும் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த புதிய அரசு கடந்த காலத்தில், கடந்த வாரம் அரிசிகளை இறக்குமதி செய்திருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசு தொடர்பான சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
மிகவும் தெளிவாக நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் எமக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலைமை என்பது, வடக்கு கிழக்கு என்பதில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில், புதிய தேசியக் கட்சிகள் தமிழர்களுடைய உரிமைகளைச் சிதைப்பதற்காக, தமிழர்களுடைய உரிமைகளை விலைபோட்டுக் கூறுபோட்டு விற்பதற்காக, எமது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்காகப் பலதரப்பட்ட சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எதிர்காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமானால், கடந்த காலத்தில் தமிழ்த்தேசியம் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் ஆயுதப் போராட்டத்திற்காக நாங்கள் முழுமையாகப் பங்களிப்புச் செய்து, தியாகத்தை அர்ப்பணிப்பும் செய்த மக்களாக, குடும்பங்களாக நாங்கள் இருப்போமேயானால், எதிர்காலத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கக்கூடியவாறு செயல்வடிவத்தைக் கொடுப்பதற்குரிய தலைமை தாங்கக் கூடியவர்களாக நீங்கள் மாற வேண்டும்.
ஆகவே எதிர்காலத்தில் உங்களுடைய உழைப்பு வீண்போகாமல் இருக்க வேண்டுமானால், உங்களுடைய உறவினர்கள் தியாகங்கள், அர்ப்பணிப்புகளுக்கும் விலைமதிக்க முடியாத ஒரு சொத்துக்களாகப் போற்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமானால், எதிர்காலத்தில் நாங்கள் தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்கக்கூடியவாறு செயல்வடிவத்தைக் கொடுத்தே ஆகவேண்டும். தியாகி தினத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு செய்தியாகவே நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு அறைகூவலாகவே அதை எடுத்துக்கொள்ளலாம். தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அனைவரும் மிகவும் சிறப்பான முறையில் நாங்கள் உழைத்தே ஆகவேண்டும்.
நாங்கள் இந்த விடயத்தில் பலவீனமடைவோமேயானால் எதிர்காலத்தில் எம்முடைய விழுமியங்கள் மற்றவர்கள் ஆளக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டே வரும். இன்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட சூழ்நிலை உங்களுக்குத் தெரியும். ஆகவே இந்தத் தியாகி தின இந்நாளில் நாங்கள் எதிர்காலத்தில் இந்தத் தமிழ் சமூகத்திற்காக என்னென்ன விடயங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்த்து உழைக்க முடியுமோ, அந்த விடயங்களை நாங்கள் மிகவும் நேர்த்தியாகச் செய்வதற்கு, எங்களைச் சரியாகக் கொண்டு செல்வதற்கு கடந்த காலத்தில் உங்கள் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.
உங்களால் இடப்பட்ட அந்த அடி உரம் என்பது, உங்களால் இடப்பட்ட உரமும், அடையாளமும் என்பது, விதை என்பது எதிர்காலத்தில் தமிழ் சமூகத்திற்கு நல்ல சேவையைச் செய்வதற்கான அடி உரத்தை நீங்கள் ஒவ்வொருவரும் இட்டிருக்கின்றீர்கள், சரியான அழுத்தத்தைப் போட்டிருக்கின்றீர்கள். எதிர்காலத்தில் அந்த அழுத்தம் உங்களால் இடப்பட்ட அழுத்த அளவு என்பது எதிர்காலத்தில் நல்ல சமூகமயமாக்கப்பட்டு, நல்ல பலன்களை இந்த மக்களுக்கு அளிக்கும் என நான் நம்புகின்றேன்.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

