கிராமப்புற மற்றும் உள்ளூர் வீதி வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் Integrated Road Investment Program (iROAD)திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் பல வீதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தடைப்பட்டிருந்தன.
அந்தவகையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளில் குறித்த
சில வீதிகளை புனரமைப்பதற்காக நிதியானது ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவுபடுத்தும் நோக்குடனும் கிராம மட்ட அமைப்புக்களிடம் கருத்துக்களைக்கேட்டறிந்து கொள்ளும் நோக்குடனும் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.





