முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்திடும் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்திடும் நோக்கில் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(06) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 9.30 மணிக்கு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில். சுற்றுலாத்துறையினை மேம்படுத்திடும் நோக்கில் வட மாகாண சுற்றிலா பணியகம் வவுனியா பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஓர் கருத்தரங்கு ஆய்வினை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில். நடாத்தியிருந்தனர்.
இதில் 71 சுற்றுலாத் தளங்கள் சிறந்த சுற்றுலா இடமாக பரிந்துரைக்கப்பட்டன. அதில் தற்போது பத்து இடங்கள் முதன்மை அடிப்டையில் சுற்றுலா அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டன.
இன்றைய இந்த கலந்துரையாடலானது முன்னிலை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட குறித்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஏதுவான விடயங்கள், அதன் சாதக பாதகத் தன்மைகள், அபிப்பிராயங்கள் முதலான விடயங்களை மாவட்ட சுற்றுலா பங்குதாரர்களுடன் விரிவாக கலந்துரையாடும் நோக்கமாக குறித்த கருத்தரங்கு அமைந்திருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மஞ்சுளாதேவி(நிர்வாகம்) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ்.ஜெயக்காந் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர், விடுதி உரிமையாளர்கள், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.