யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவுப்பொருட்கள் அடங்கிய மூன்று நாள் கண்காட்சி

 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற 17ஆவது ஆண்டு நினைவேந்தலுடன் இணைந்து, “நினைவாயுதம்” என்ற தலைப்பில், இனஅழிப்பிற்கு உள்ளான தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களையும் வேதனைகளையும் எதிர்கால தலைமுறைகளுக்குக் கடத்தும் செல்லும் நோக்கில், முள்ளிவாய்க்காலுடன் தொடர்புடைய புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் நினைவுப்பொருட்கள் அடங்கிய மூன்று நாள் கண்காட்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.