செங்கலடி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம்!

(செங்கலடி நிருபர் சுபஜன்)

செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் – முதலாம் நாள் பூஜை சிறப்பாக நடைபெற்றது

மட்டக்களப்பு செங்கலடி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் கந்த சஷ்டி விரதம் இன்று (புதன்கிழமை) முறையாக ஆரம்பமானது.

விரதத்தின் முதலாம் நாள் காலை சிறப்புப் பூஜைகள், அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தேவார பதிகங்கள் பக்தி பாடல்கள் என்பன இடம்பெற்றன. பல பக்தர்கள் தங்கள் குடும்ப நலன், நோய் நொடி இல்லா வாழ்க்கை மற்றும் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பலவற்றை வேண்டி விரதத்தில் ஈடுபட்டனர்.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ஜெயக்குமார் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றதுடன் , 

ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து  முறையாக பூஜை நிகழ்வுகளை முன்னெடுத்தனர். கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், இறுதி நாளில் சூரசம்ஹாரம் மற்றும்   பல்வேறு இறை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.