கிழக்குப் பல்கலைக்கழகத்;தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 04ஆம் 05ஆம் திகதிகளில்


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்;கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் அவர்களின்; தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இப்பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தமாக 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்  பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் உறுதிசெய்வார்.

மேலும் இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அமைச்சரின்; செயலாளர் திரு. ஜி. பிரதீப் சபுதந்திரி  அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன அவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்;.

4ம் மற்றும் 5ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இப்பட்டமளிப்பு நிகழ்வில் ஒவ்வொரு நாளும் தலா மூன்று அமர்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளின் முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மூன்றாவது அமர்வின் போது முறையே 345, 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் இந்நிகழ்வின் இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை,  தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள்   வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.