புல்லுமலையில் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் மாகாண மட்ட விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தோருக்கு HELLO KIDS Montessori பரிசில் வழங்கி வைப்பு!


(சுபஜன்)

 தரம்-5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபரது தலைமையில்  நேற்று (09) ஏறாவூர் HELLO KIDS Montessori இன் ஊடாக  புல்லுமலை RCTM வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

புல்லமலை RCTM பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் - HELLO KIDS Montessori நிர்வாகத்தினர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பொற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந் நிகழ்வில் மாணவர்கள் வெற்றிச் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களை கற்பித்த மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.