வந்தாறுமூலை டைமன் விளையாட்டு கழகத்தின் பிரீமியர் லீக் கிரிக் சுற்றுப் போட்டி ஆரம்பம்.

 


(வந்தாறுமூலை நிருபர் தீபன்)

வந்தாறுமூலை டைமன் விளையாட்டு கழகத்தின் பிரீமியர் லீக் கிரிக் சுற்றுப் போட்டி ஆரம்பம்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டு கழகத்தின் பிரீமியர் லீக் கிரிக் சுற்றுப் போட்டி எதிர்வரும் 27 .9.2025 மற்றும் 28.9.2025 ம் திகதிகளில் வெகுவிமர்சியாக நடைபெற உள்ளது.

  கழகத் தலைவர் திரு .ஈ. அஜய் தலைமையில் இந்த நிகழ்வுகள் யாவும் நடைபெறவுள்து,  இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆனது 27.9. 2025 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்பமாகி மறுநாள் 28.09.2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெற்றி கேடயங்கள் வழங்குகின்ற நிகழ்வுடன் நிறைவடைய இருக்கிறது .

இந்நிகழ்வில் கழகத்தினுடைய பழைய ஓய்வு பெற்ற வீரர்களும் ஆரம்பகால வீரர்களும் தற்போதைய இளம் வீரர்களையும் இணைத்ததாக ஓர் அணியில் 11 வீரர்கள் கொண்ட போட்டியாகவும் மொத்தமாக ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த பிரிமிய லீக் கிரிக்கெட் சுட்டு போட்டி இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. 

 இந்த கிரிக்கெட் சுட்டிப் போட்டி நிகழ்வில் முக்கிய ஒரு விடயமாக கருதப்படுவது தங்களுடன் ஆரம்ப காலம் தொட்டு கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் களமாடிய ஒரு சில வீரர்கள் தற்போது அமரத்துவமடைந்திருக்கின்ற நிலையில் அந்த மறைந்த அவர்களுடைய நண்பர்களை நினைத்து ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்ற ஒரு நிகழ்வாகவும் அமைந்திருக்கிறது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.