பாடசாலை வரலாற்றில் 28 வருடங்களின் பின்னர் ஒரு மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!


கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய்   வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 
28 வருடங்களின் பின்னர் இந்த மாணவன்  புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயம். 

பாடசாலையின் அதிபர் த.சதானந்தகுமார்  மேற்பார்வையில் 
மாணவனுக்கு  கற்பித்த ஆசிரியர்கள் இராஜேந்திரன் தஸ்வினி மற்றும் ஏ.சிவகரன்,பி. நிஷாலினி  (அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்)  மாணவனுக்கு  வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.