மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் குழாய் நீர் விநியோகத்தின் சுகாதாரத் தாக்கங்கள் குறித்து, துறைசார் வல்லுநர்கள் மற்றும் அரச அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக் கூட்டம் ஒன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இக் கூட்டத்தில், குடிநீர் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதன் அவசியமும், அதன் மூலம் தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதற்கான வழிமுறைகளும் விரிவாக ஆராயப்பட்டதுடன் குடிநீரின் தரம் மற்றும் விநியோகத்தில் உள்ள சவால்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
07.08.2024 ஆம் திகதி வியாழக்கிழமைன்று பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் ஆய்வுக் கூட்டத்தில் துறைசார் நிபுணர்கள், அரச குடிநீர் வழங்கல் பிரிவினர் மற்றும் உள்ளூராட்சி சார் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.