மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனை சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதியும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்தனர்.
மட்டக்களப்பு நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியுடன் தன்னாமுனை தேவாலய குறுக்கு வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கடும் சேதமடைந்ததுடன் அதனை செலுத்திவந்த இருவரும் காயமடைந்தனர்.
ஸ்தலத்திற்கு வருகைதந்த ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.