பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள்


மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாகயிருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.நீண்டகாலமாக ஒலிபெருக்கி சாதனங்கள் இல்லாத காரணத்தினால் தமது நிகழ்வுகளை நடாத்துவதில் பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் பாடசாலை நிகழ்வொன்றுக்கு இலண்டன் குளோபல் ஸரிட்டியின் ஸ்தாபகர் எஸ்.கோபிகிருஸ்ணாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு பாடசாலையில்  நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள், குளோபல் ஸரிட்டியின் இணைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.