மூதூரிலுள்ள தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

 



மூதூரில் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 நபர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 19 வருடங்கள் கடந்துள்ளது.

இதனை நினைவுபடுத்தும் முகமாக திருகோணமலையில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டை தலைமையமாகக்க் கொண்டு இயங்கிய குறித்த தன்னார்வ நிறுவனமானமொன்றில் பணியாற்றிய 17 ஊழியர்கள் 2006 ஆம் ஆண்டு நிலவிய யுத்தத்தில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.