சிறுவர் பாதுகாப்பு கொள்கைச் சட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்


முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாட்டில்  தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைச் சட்டங்கள் தொடர்பிலான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல்  இடம்பெற்றது.  

குறித்த கலந்துரையாடலினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்.எஸ்.குணபாலன் ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட பதில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிருந்தாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்வி வலயங்களின் ஆசிரியர் ஆலோசகர்கள்,  பிரதேச செயலகங்களின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொலிஸார் முதலானோர் கலந்துகொண்டனர்.