வெகுவிமர்சையாக நடைபெற்ற பௌர்ணமி கலை விழா..!


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா இன்று (10) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்புஇ கல்லடி கடற்கரையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் கலந்து கொண்டார். 

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.பார்த்தீபன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்னம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மட்டகளப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இலைமறை காயாக உள்ள கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர மேடையினை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.