தமது ஜீவனோ பயமாக உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்களை பிடிப்பதற்காக நீரில் மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறை ஒன்றை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இக்காப்புறுதி முறையினால் காலநிலை மாற்றங்களினால் அல்லது மீன்பிடித் தொழிலில் தொடர்ந்தும் ஈடுபடும் போது விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பு அல்லது ஏனைய அசம்பாவிதங்களின் போது காப்புறுதி வழங்கும் செயற்பாடு இடம்பெறும்.
மீன்பிடி செயல்பாடுகளுக்கு அப்பால் உள்ள சந்தர்ப்பங்களிலும் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக மரணம் அல்லது ஏனைய அசம்பாவிதங்களுக்காக பிரதிபலன்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி வருடாந்தம் 2000 மாதாந்த தவணைக் கட்டணமாக செலுத்தி உயிரிழக்கும் போது 12 லட்சம் ரூபாய் நிதி இழப்பீடாக இக்காப்புறுதி மூலம் வழங்கப்படும்.
அது தவிர பூரண மற்றும் தற்காலிக அசம்பாவிதங்களின் போது இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் விபத்தொன்றின் காரணமாக ஊனமுற்றவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது, மேலும் விபத்தின் காரணமாக ஒரு கண் இழப்பு, ஒரு மூட்டு இழப்பு மற்றும் முழுமையான பேச்சு இழப்பு போன்ற நிகழ்வுகளுக்கு மிக விரைவாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.