விழிப்புலனற்றவர்கள் வாக்களிப்பதற்கு வாக்களிப்பு நிலையங்களில் விசேட சட்டகம் -உதவி தேர்தல் ஆணையாளர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 87பொலிஸ் நடமாடும் பிரிவுகள் கண்காணிப்பினை முன்னெடுத்துவருவதுடன் தேர்தல் பாதுகாப்புகளுக்காக 1500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.விழிப்புலனற்றவர்கள் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் விசேட சட்டகம் வைக்கப்பட்டுள்ளதாகவும் உதவியாளர் ஒருவருடன் சென்று விழிப்புலனற்றவர்கள் வாக்களிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் விதி மீறல்களை எதிர்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு  கருத்துதெரிவித்தார்.