(செங்கலடி நிருபர் சுபஜன்)
செங்கலடி கோப்பாவெளி – மதுராபுரம் மாதிரிக்கிராம வீட்டுத்திட்டத்தை திறந்துவைத்தார்; மட்டு அரசாங்க அதிபர்.
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி தும்பாலஞ்சோலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 25 வீடுகள் கொண்ட மதுராபுரம் மாதிரிக்கிராம வீட்டுத்திட்டத்தை திறந்துவைத்து பயணாளிகளிடம் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா யுலைக்கா முரளிதரன் கையளித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபையினால் நிர்மானிக்கப்பட்ட 25 வீடுகளை UNDP நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் முழுமையான புணர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலைக்கா முரளிதரன் கலந்து கொண்டிருந்ததுடன், சிறப்பு அதிதிகளாக மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பானர் வீ.நவநீதன், ஏறாவூர் பற்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு முகாமையாளர் த.சுபாஸ்கரன், UNDP நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கே.பார்த்தீபன் உள்ளிட்டோருடன் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதிதிகளினால் மதுராபுரம் மாதிரிக்கிராம பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டதுடன், வீடுகளும் திறந்துவைக்கப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.